உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.19 கோடி கஞ்சா பறிமுதல்  கடத்தி வந்த தம்பதி கைது

 ரூ.19 கோடி கஞ்சா பறிமுதல்  கடத்தி வந்த தம்பதி கைது

பெங்களூரு: பாங்காங்கில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 19 கோடி ரூபாய் ஹைட்ரோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தம்பதியை கைது செய்தனர். பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி: பெங்களூரு மஹாலட்சுமி லே - அவுட் அப்பக்கா விளையாட்டு மைதானம் பகுதியில் கடந்த 30ம் தேதி, வாலிபரும், இளம்பெண்ணும் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18.50 கிலோ எடையுள்ள 18.60 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கைதானவர்கள் கம்மனஹள்ளியை சேர்ந்த மெக்கானிக் சைபுதீன் ஷேக், 34, அவரது மனைவி சாரா சிம்ரன், 26 என்பது தெரிந்தது. இவர்கள் இருவரும் சமீபத்தில் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றனர். அங்கிருந்து திரும்பி வரும்போது ஹைட்ரோ கஞ்சா கடத்தி வந்துள்ளனர். உணவு பொட்டலத்தில் மறைத்து வைத்து, சுங்க துறை அதிகாரிகளுக்கு தெரியாமல், விமான நிலையத்தில் இருந்து கஞ்சாவை வெளியே எடுத்து வந்துள்ளனர். கைதானவர்கள் மீது இதற்கு முன்பு எந்த வழக்கும் இல்லை. இதனால் அவர்களை போதை பொருள் கடத்தும் கும்பல் குருவியாக பயன்படுத்தி உள்ளனர். இந்த வலையமைப்பின் பின்னணியில் இருப்பவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ''ஆர்.எம்.சி.யார்டு, ஆர்.டி.நகர், ஜே.சி.நகர், மல்லேஸ்வரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 15.90 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை