மேலும் செய்திகள்
3 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல்
3 minutes ago
பிரதமரான பின் முதன் முறையாக மோடி 28ல் உடுப்பி வருகை
3 minutes ago
வீட்டில் பகுதி நேர வேலை ரூ.10 லட்சம் ஏமாந்த பெண்
4 minutes ago
இன்று இனிதாக...
6 minutes ago
ஹூப்பள்ளி: ஹைதராபாத்தில் பலருக்கு அதிக லாபம் ஆசை காட்டி, 23 கோடி ரூபாய் சுருட்டிய மோசடி செய்த தம்பதி, ஹூப்பள்ளியில் போலீசாரிடம் சிக்கினர். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதை சேர்ந்தவர் சதீஷ் உப்பலபாடி, 55. இவரது மனைவி ஷில்பா பண்டா 50. தங்கள் தொழிலில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக மக்களுக்கு இவர்கள் ஆசை காண்பித்தனர். இதை நம்பிய பலரும், லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்தனர். 23 கோடி ரூபாய் வரை சுருட்டிக் கொண்டு, இரவோடு இரவாக தலைமறைவாகினர். இவர்களிடம் பணம் முதலீடு செய்திருந்தவர்கள், ஹைதராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, மோசடி தம்பதியை தேடி வந்தனர். அவர்களின் மொபைல் லோகேஷனை வைத்து கண்காணித்தனர். இந்நிலையில் தம்பதி, நேற்று மதியம் ஹூப்பள்ளி - தார்வாட் பைபாஸ் வழியாக, காரில் செல்வதை கண்டுபிடித்தனர். உடனடியாக ஹூப்பள்ளி - தார்வாட் போலீசாரை தொடர்பு கொண்டு, தம்பதியை பற்றி தகவல் தெரிவித்தனர். அவர்களை பிடிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதன்படி நடவடிக்கை எடுத்த ஹூப்பள்ளி - தார்வாட் போலீசார், காரை மடக்கி பிடித்து, சதீஷ், ஷில்பாவை கைது செய்தனர். அவர்களை ஹைதராபாத் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
3 minutes ago
3 minutes ago
4 minutes ago
6 minutes ago