மேலும் செய்திகள்
மூவர் தற்கொலை முயற்சி தந்தை, மகன் உயிரிழப்பு
16-May-2025
ஹாசனின், மொசளேகடி கிராமம் அருகில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்த பைக், கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதியது. இதில் ஹுசைப், 23, சமீர், 21, உயிரிழந்தனர்.பெங்களூரை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா, 23. இவர் ஷிவமொகாவின் சுப்பய்யா மருத்துவ கல்லுாரியில் மருத்துவம் படித்தார். கல்லுாரியின் விடுதி அறையில் தங்கியிருந்த இவர், நேற்று காலை துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.ஹூப்பள்ளியின், எஸ்.எம்.கிருஷ்ணா நகரில் வசித்தவர் பாஷா சாப் சங்கேஸ்வரா, 65. இவர் நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதை அடைக்க முடியாமல், அவதிப்பட்ட அவர், நேற்று காலை துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.கொப்பால், குஷ்டகியின் தாவரகெரே கிராமத்தில் வசித்தவர் சென்னப்பா ஹுசேனப்பா நாரிஹாளா, 35. இவர் பேக்கரி நடத்தி வந்தார். நேற்று முன் தினம் இரவு, இவர் பேக்கரியில் இருந்தபோது, மர்ம கும்பல் உள்ளே நுழைந்து, அவரை வெளியே இழுத்து, வெட்டிக் கொலை செய்தது. ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். முன் பகை காரணமாக, கொலை நடந்துள்ளது.பெங்களூரின் பல்வேறு இடங்களில், நேற்று காலையில் போக்குவரத்துத் துறை மற்றும் போலீஸ் துறை ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். பர்மிட் இல்லாமல் இயங்கிய 68 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ராய்ச்சூர், மஸ்கி புறநகரில் நேற்று மதியம் மஞ்சுநாத், நாகப்பா பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த லாரி மோதியதில், இருவரும் உயிரிழந்தனர்.
16-May-2025