உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு இரண்டு ஆண்டில் 6.87 லட்சம் புகார்கள்

 சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு இரண்டு ஆண்டில் 6.87 லட்சம் புகார்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இரண்டு ஆண்டுகளில் குழந்தைகள் உதவி எண்ணுக்கு, 6.87 லட்சம் அழைப்புகள் வந்தன. இவற்றில் 33,945 புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிவாகியுள்ளது. இதுகுறித்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: சிறார்களின் பாதுகாப்புக்காக, '1098' உதவி எண் துவங்கப்பட்டுள்ளது. இதில் குழந்தை திருமணம், சிறார்கள் மாயம், பாலியல் வன்முறை, சிறார்கள் கடத்தல், பெற்றோரால் அலட்சியம் என, பல விதமான புகார்கள் வருகின்றன. கடந்த 2023 செப்டம்பரில் இருந்து, 2025 அக்டோபர் வரை, 6.87 லட்சம் புகார்கள் வந்தன. இவற்றில் 33,945 புகார்கள் தொடர்பாக, வழக்குகள் பதிவாகியுள்ளன. பெங்களூரில் 5,273, மைசூரில் 2,054, கலபுரகியில் 1,507, தார்வாடில் 1,264, ஹாசனில் 1,265, பெலகாவியில் 1,209 புகார்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் புகார்கள் வந்துள்ளன. பீதர் மாவட்டத்தின் சில இடங்களில் இருந்து, தங்களுக்கு பலவந்தமாக பெற்றோர் திருமணம் செய்து வைப்பதாக சிறுமியரே புகார் அளித்தனர். அக்கம், பக்கத்தினரிடம் இருந்தும் புகார்கள் வருகின்றன. குழந்தைகள் பாதுகாப்புக்கு ஆணையம் முக்கியத்துவம் அளிக்கிறது. குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து கிராம பஞ்சாயத்து, பள்ளி, கல்லுாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட துறைகள் கைகோர்த்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை பிரச்னை, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் அலட்சியம், அவர்களின் நடத்தை சரியில்லை, விடுதிகளில் தொந்தரவு இருந்தால், சிறார்கள் 1098 உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை