மேலும் செய்திகள்
சட்டவிரோத பண பரிமாற்றம் மூவருக்கு ஈ.டி., சம்மன்
26-Sep-2025
பெங்களூரு: போலீஸ் அதிகாரிகளின் பெயரில், பொதுமக்களை தொடர்பு கொண்டு மோசடி செய்து, பணம் பறித்த நிறுவனத்தின் மீது, வழக்குப் பதிவாகியுள்ளது. பெங்களூரு, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டின் 27வது பிரதான சாலையில், 'சிபிக்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில், 20 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஆன்லைனில் எப்படி மோசடி செய்வது என்பது குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களும் அறிமுகமில்லாத நபர்களுக்கு போன் செய்து போலீஸ் அதிகாரிகள் போன்று பேசினர். 'உங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து வழக்கு பதிவாகியுள்ளது, உங்கள் பெயரில் போதைப்பொருள் வந்துள்ளது' என, மிரட்டி லட்சக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் செய்ய வைத்து வந்தனர். இதுகுறித்து, இன்பார்மர்கள் மூலமாக, போலீசாருக்கு தகவல் வந்தது. நேற்று காலையில், அந்த நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தினர். விசாரணை நடத்தியபோது, சைபர் மோசடி நடப்பது தெரிந்தது. நிறுவனத்தின் அக்கம், பக்கத்தினரை விசாரித்தபோது, மோசடி நடப்பதாக சந்தேகம் உள்ளதாக கூறினர். இரவு நேரத்தில் பொது மக்களை தொடர்பு கொண்டு, மிரட்டியது விசாரணையில் தெரிந்தது. நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மோசடியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
26-Sep-2025