மேலும் செய்திகள்
உடல்நிலை பாதிப்பு: அர்ச்சகர் தற்கொலை
27-Oct-2025
நெலமங்களா: நின்றிருந்த கார் மீது, லாரி மோதியதில் டான்ஸ் மாஸ்டர் உயிரிழந்தார். பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், தியாமகொன்ட்லுவில் வசித்தவர் சுதீந்திரா, 36. இவர் தொலைக்காட்சி சேனலில் டான்ஸ் ஷோ, பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தார். தாபஸ்பேட்டில் நடன வகுப்பு நடத்தி, நுாற்றுக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்களுக்கும், சிறார்களுக்கும் நடனம் கற்றுக்கொடுத்தார். அது மட்டுமின்றி, நிகழ்ச்சிகளில் பூ அலங்காரம் செய்தும், வாழ்க்கை நடத்தினார். இவர் சமீபத்தில் புதிய கார் வாங்கினார். நேற்று முன்தினம் மதியம் காரில் வெளியே புறப்பட்டார். நெலமங்களா தாலுகாவின், பெம்மனஹள்ளி அருகில் சென்றபோது, சாலை மத்தியில் கார் பழுதடைந்து நின்றது. என்ன பிரச்னை என்பதை பார்ப்பதற்காக அவர் கீழே இறங்கினார். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
27-Oct-2025