உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆம்புலன்ஸ் இல்லாததால் உயிரிழப்பு: இறந்தவரின் உறவினர்கள் போராட்டம்

ஆம்புலன்ஸ் இல்லாததால் உயிரிழப்பு: இறந்தவரின் உறவினர்கள் போராட்டம்

தங்கவயல்: கோரமண்டல் ஓரியண்டலை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 50. இவருக்கு நேற்று முன் தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டது. ராபர்ட்சன்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக தீவிர சிகிச்சைக்காக கோலார் அல்லது பெங்களூருக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர் பரிந்துரைத்தார்.மருத்துவமனை ஆம்புலன்ஸ் கேட்டு உள்ளனர். மருத்துவமனையில் உள்ள மூன்று ஆம்புலன்ஸ்களில், இரண்டு பழுதடைந்து ஒர்க் ஷாப்பில் உள்ளன; இன்னொன்று வேறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளது என கூறி உள்ளனர்.அரைமணி நேரம் எதிர்ப்பார்த்தும் ஆம்புலன்ஸ் வராததால், தனியார் வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்து கோலாருக்கு சென்றனர். ஆனால் வழியிலேயே, ஆனந்தராஜ் இறந்துவிட்டார்.உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் உயிரை காப்பாற்றிருக்க முடியும். இது மருத்துவமனையின் அலட்சியம் என்று கூறி, இறந்தவரின் உறவினர்கள் ராபர்ட்சன்பேட்டை மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு அமைதிப்படுத்தினர்.இறந்த ஆனந்தராஜ், பெங்களூரு 'எஸ்கார்ட்' தொழிற்சாலையின் ஊழியர். தினப் பயணியாக ரயிலில் பயணம் செய்தவர். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், சச்சின், 16, என்ற மகனும், நிஷா, 13, என்ற மகளும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ