உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாலை பணிகள் தாமதம் ஹோட்டல்கள் பாதிப்பு

சாலை பணிகள் தாமதம் ஹோட்டல்கள் பாதிப்பு

பெங்களூரு: பெங்களூரு முழுதும் நடக்கும் சாலை சீரமைப்புப் பணிகள், மிகவும் தாமதமாவதால் வியாபாரம் குறைந்துள்ளதாக, ஹோட்டல் உரிமையாளர்கள் மாநில அரசின் மீது, அதிருப்தி தெரிவித்துள்ளனர். பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், துணை முதல்வர் சிவகுமாருக்கு எழுதிய கடிதம்: பெங்களூரின் சீதா சதுக்கம் சாலை, ராஜ்குமார் சாலை, மசூதி சாலை, சேஷாத்ரிபுரம், மிஷன் சாலையில் சாலை சீரமைப்புப் பணிகள் நடக்கின்றன. எந்த பணிகளும் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் முடிவது இல்லை. மூன்று மாதங்களில் முடிய வேண்டிய பணிகள், ஒன்றரை ஆண்டுக்கும் மேலாகியும் முடியவில்லை. இதன் விளைவாக ஹோட்டல், பேக்கரி, தின்பண்ட கடைகள், பார் அண்ட் ரெஸ்டாரென்ட்கள் மட்டுமின்றி, மற்ற தொழில்களும் பாதிக்கப்படுகின்றன. எங்களுக்கு 50 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது. தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன், சாலைகளில் நடக்கும் பொது மக்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள் பிரச்னைகளில் சிக்குகின்றனர். எனவே, சாலை பணிகளை விரைந்து முடிக்கும்படி, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட வேண்டும். சொத்து வரி, குப்பை வரி, மின் கட்டணம், கலால் வரி, லைசென்ஸ் கட்டணங்களை குறைந்தபட்சம் 50 சதவீதம் குறைத்து, வியாபாரிகள் மீதான பொருளாதார சுமையை குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி