உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இளைஞரை கொன்ற சிறுத்தையை பிடிக்கும் பணியில் ட்ரோன், யானைகள்

இளைஞரை கொன்ற சிறுத்தையை பிடிக்கும் பணியில் ட்ரோன், யானைகள்

பெங்களூரு: மைசூரில் இளைஞரை கொன்ற சிறுத்தையை கண்டுபிடிக்க ட்ரோன், கும்கி யானைகள், இரும்பு பொறி அமைத்து 30க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தேடுதல் வேட்டையை துவக்கி உள்ளனர்.மைசூரு மாவட்டம், ஹூன்சூரின் குருபாரா ஹொசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ், 24. கடந்த 26ம் தேதி, தன் தந்தை கிருஷ்ணாவுடன் சொல்லேபுரா வனப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.அப்போது ஆட்டை வேட்டையாட சிறுத்தை வந்தது. இதை பார்த்த ஹரிஷ், ஆட்டை காப்பாற்ற சிறுத்தையை விரட்ட முயற்சித்தார். ஆனால், சிறுத்தை அவர் மீது பாய்ந்து கடித்து குதறியது. ஹரிசின் தந்தை கூச்சலிட்டார். சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.ஹரிசை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தனர்.ஹூன்சூர் மண்டல பிரிவின் யானை அதிரடிப்படையனர், சிறுத்தை அதிரடிப்படையினர், நாகரஹொளே புலிகள் வனப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி, சிறுத்தையை பிடிக்க ஒரு ஆடு, நான்கு எருதுகள் அடைக்கும் வகையில் கூண்டு அமைத்து உள்ளனர். மேலும் வனப்பகுதியின் பல பகுதிகளில் 15 கண்காணிப்பு கேமராக்கள், ஒரு ட்ரோன், இரண்டு யானைகளும் ஈடுபட்டு உள்ளன.வனத்த்துறை அதிகாரி சீமா கூறுகையில், ''உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 லட்சம் ரூபாய் விரைவில் வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ