மேலும் செய்திகள்
சந்தேகமா... டாக்டரை கேளுங்கள்...
29-Jun-2025
சமீப ஆண்டுகளாக காஸ் சிலிண்டர், ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையாகியுள்ளது. இதற்கு முன் விறகு அடுப்பில் சமைத்தனர். அதன்பின் மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்தினர். பம்ப் ஸ்டவ் பயன்படுத்தினர். இப்போது காஸ் ஸ்டவ் பயன்படுத்துகின்றனர். காஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை.பல வீடுகளில் காஸ் சிலிண்டர், நிர்ணயித்த நாட்கள் வரை வருவதே இல்லை. விரைவில் காலியாகிறது என, பெண்கள் புலம்புவதை கேட்டிருக்கிறோம். சிலிண்டர் விரைவில் காலியானால், வீட்டு பட்ஜெட்டில் துண்டுவிழும். காஸ் சிலிண்டர் ஏன் விரைவில் காலியாகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எட்டு விஷயங்களை பின்பற்றினால், இதை தவிர்க்க முடியும். காஸ் நீண்ட நாட்கள் வரும். பைப் அல்லது சிலிண்டரில் கசிவு இருந்தால், காஸ் நிதானமாக வெளியேறும். காஸ் வீணாவதுடன், அபாயத்தையும் ஏற்படுத்தும். எனவே சிலிண்டர், பைப்களில் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அத்தியாவசிய பணிக்கு மட்டும், காஸ் பயன்படுத்துங்கள். அவ்வப்போது டீ, காபி சுட வைக்க, தண்ணீர் கொதிக்க வைப்பதாலும் காஸ் வீணாகும். காஸ் ஸ்டவ்வில் சமைக்கும்போது, மூடி வைத்து சமையுங்கள். உணவு விரைவில் வேகும். காஸ் மிச்சமாகும். பொதுவாக பாத்திரத்தை விட, பிரஷர் குக்கரில் உணவு, காய்கறிகள், பருப்பு விரைவில் வேகும். காஸ் மற்றும் நேரம் என, இரண்டையும் மிச்சப்படுத்தலாம். தரமற்ற, அடைப்புள்ள பர்னர்களை பயன்படுத்துவதாலும், காஸ் அதிகம் செலவாகும். எனவே பர்னர்களை வாரந்தோறும் பிரஷ் அல்லது ஊசியால் குத்தி சுத்தம் செய்ய வேண்டும். காஸ் சீராக வெளியேறும். உணவும் விரைவில் வேகும். ஈரமான பாத்திரங்களை, அப்படியே காஸ் ஸ்டவ் மீது வைக்காதீர்கள். பிரிட்ஜில் இருந்து எடுத்த பால், காய்கறிகளை நேரடியாக காஸ் ஸ்டவ் மீது வைப்பதால், அது சூடாக காஸ் அதிகம் செலவாகும். ஈரப்பதம் காய்ந்த பின் ஸ்டவ்வில் வையுங்கள். ஸ்டவ்வை அதிக தீயில் எரிய விட்டால், காஸ் அதிகம் வெளியேறி விரைவில் காலியாகும். எனவே மிதமான தீயில் வைத்து சமையுங்கள். காஸ் கசிவு ஏற்படுகிறதா என்பதை, அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளுங்கள். காஸ் பைப், சிலிண்டர், கனெக்டரை பரிசோதிப்பது நல்லது - நமது நிருபர் -.
29-Jun-2025