உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நகைக்காக மூதாட்டி கொலை: பக்கத்து வீட்டு பெண் கைது

நகைக்காக மூதாட்டி கொலை: பக்கத்து வீட்டு பெண் கைது

ஆனேக்கல்: தங்க நகைக்காக, மூதாட்டியை கொலை செய்து, உடலை மூட்டையில் அடைத்து புதரில் வீசிய பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டார். பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், கூகுரு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்தவர் பத்ரம்மா, 68. இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் தீபா, 30. பக்கத்து வீடு என்பதால், இருவருக்கும் அறிமுகம் இருந்தது. அவ்வப்போது பத்ரம்மா, தீபாவின் வீட்டுக்கு செல்வது வழக்கம். பத்ரம்மா அதிகமான தங்கநகைகளை அணிந்திருந்தார். இந்த நகைகள் மீது தீபா கண் வைத்திருந்தார். மூதாட்டியை கொலை செய்து, நகைகளை திருட திட்டம் தீட்டினார். இதன்படி அக்டோபர் 30ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத போது, தீபாவளிக்கு அதிரசம் செய்துள்ளேன். வீட்டுக்கு வாருங்கள் தருகிறேன் என, பத்ரம்மாவை தீபா அழைத்தார். சதியை அறியாத மூதாட்டி அதிரசம் சாப்பிட, பக்கத்து வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை தாக்கியும், கழுத்தை நெரித்தும் தீபா கொலை செய்தார். தங்க நகைகளை கழற் றி கொண்டார். உடலை மூட்டையில் அடைத்து, தன் குடும்பத்தினருக்கு தெரியாமல், இரண்டு நாட்கள் மறைத்து வைத்திருந்தார். அதன்பின் துர்நா ற்றம் வீசியதால், தன் மகனிடம் குப்பையை மூட்டை கட்டி வைத்துள்ளேன். அழுகி நாற்றம் எடுக்கிறது. வெளியே வீசி வரலாம் என, நம்ப வைத்து இரு சக்கர வாகனத்தில் வைத்து, தொட்டதிம்மசந்திரா ஏரி அருகில் உள்ள புதரில் வீசினார். இதற்கிடையே மூதாட்டியை காணாமல், குடும்பத்தினர் தேடி அலைந்தனர். பக்கத்து வீட்டு தீபாவை கேட்ட போது, தனக்கு தெரியாது என, நாடகமாடினார். அதன்பின் சர்ஜாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை நடத்தினர். அக்கம், பக்கத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பத்ரம்மா காணாமல் போவதற்கு முன், கடைசியாக தீபாவின் வீட்டுக்கு சென்றது பதிவாகியிருந்தது. வெளியே வந்தது பதிவாகவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை தீவிரமாக விசாரித்த போது, தங்கநகைக்கு ஆசைப்பட்டு, மூதாட்டியை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர். மூதாட்டியின் உடலை வீசிய இடத்தையும் காட்டினார். போலீசார் உடலை மீட்டு, விசாரணையைதுவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி