மேலும் செய்திகள்
உத்திரமேரூர் பணிமனையில் எலக்ட்ரீஷியன் நியமனம்
01-Sep-2025
மைசூரு : ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீஷியன் உயிரிழந்தார். மைசூரு நகரில், மிகவும் பிரபலமான பி.எம்.ஹேபிடெட் ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு, சுனில், 27 என்பவர், எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம், மாலின் நான்காவது மாடியில், இவரும், மற்றொரு தொழிலாளி சந்துருவும் வேலை செய்து கொண்டிருந்தனர். சுனில், மாடி பால்கனியில் இருந்த போர்டு ஒன்றை அகற்றியபோது, தவறி கீழே விழுந்தார். அவரை காப்பாற்ற முயற்சித்த சந்துருவும் விழுந்தார். சுனில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சந்துருவை மால் ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொழிலாளர்கள் மாடியில் இருந்து விழும் வீடியோ, நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. தகவலறிந்து அங்கு வந்த ஜெயலட்சுமிபுரம் போலீசார், மால் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல், ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தியதே, அசம்பாவிதத்துக்கு முக்கிய காரணம் என, கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
01-Sep-2025