உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

சென்னப்பட்டணா: தென்னை மரத் தோப்புக்குள் நுழைந்த காட்டு யானை மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தது. பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னப்பட்டணா தாலுகாவில் சிக்கவிதலேனஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் நேற்று முன்தினம் இரவு, 40 வயதுடைய பெண் காட்டு யானை புகுந்தது. உணவை தேடி அலைந்த யானை, அந்த கிராமத்தில் உள்ள தென்னை தோப்புக்குள் நுழைந்தது. அப்போது, அங்கிருந்த மின்சார வேலியில் யானையின் தும்பிக்கை சிக்கியது. யானையின் மீது 11 கிலோவாட் மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்தது. கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தனர். யானை வேட்டையாடப்படவில்லை என்று மாவட்ட துணை வனப்பாதுகாவலர் ராமகிருஷ்ணப்பா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை