உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இயந்திரத்தில் சிக்கி பலியான விவசாயி

 இயந்திரத்தில் சிக்கி பலியான விவசாயி

தாவணகெரே: தாவணகெரேயில், விவசாய நிலத்தை சமன் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட 'ரோடாவேட்டர்' இயந்திரத்தில் சிக்கி, விவசாயி உயிரிழந்தார். விவசாய நிலத்தில் விதை விதைப்பதற்காக, கெட்டியாக இருந்த மண்ணை சமன் செய்வதற்காக 'ரோடாவேட்டர்' இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டரில் கட்டப்பட்ட ரோடாவேட்டர் இயந்திரம் மூலம், தன் நிலத்தை தாவணகெரே மாவட்டம், ஜகலுாரின் தித்திகி கிராமத்தை சேர்ந்த நாரப்பா நேற்று சமன் செய்து கொண்டிருந்தார். டிரைவர் அருகில் அமர்ந்திருந்த நாரப்பா, எதிர்பாராத விதமாக டிராக்டர் பின் பகுதியில் விழுந்தார். அவர் மீது ரோடாவேட்டர் இயந்திரம் ஏறியதில், உடல் கிழிந்தது. டிராக்டர் உடனடியாக நின்றபோதும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த குடும்பத்தினர், கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பிலிச்சோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்