உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மகளுக்கு பாடம் புகட்டிய தந்தை சட்ட போராட்டம் நடத்தி வெற்றி

மகளுக்கு பாடம் புகட்டிய தந்தை சட்ட போராட்டம் நடத்தி வெற்றி

சிக்கபல்லாபூர்: தன்னை வீட்டை விட்டு விரட்டிய மகளுக்கு, தந்தை தக்க பாடம் புகட்டினார். சட்டப்போராட்டம் நடத்தி வீட்டை திரும்ப பெற்றார்.சிக்கபல்லாபூர் நகரின், சாந்தி நகரில் வசிப்பவர் வெங்கட ரோணப்பா, 72. இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் சுப்பலட்சுமி, அங்கன்வாடியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். திருமணமான இவர், தன் கணவர், பிள்ளைகளுடன் தந்தையின் வீட்டில் வசிக்கிறார்.தந்தைக்கு சொந்தமான வீட்டில் இருந்தும், அவரை மகள் சுப்பலட்சுமி சரியாக பார்த்து கொள்ளவில்லை; உணவும் கொடுக்கவில்லை. இதனால் மனம் வருந்திய தந்தை, மகளுடன் சண்டை போட்டார். கோபமடைந்த மகள், தந்தையை வீட்டை விட்டு விரட்டினார்.மகளின் செயலால் மனம் நொந்த வெங்கட ரோணப்பா, தன் வீட்டை மகளிடம் இருந்து மீட்டு தரும்படி, சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம், வீட்டை தந்தையிடம் கொடுக்க வேண்டும். அவரது பராமரிப்புக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என, மகள் சுப்பலட்சுமிக்கு, நேற்று முன் தினம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை செயல்படுத்தும்படி, சிக்கபல்லாபூர் தாசில்தாருக்கும், போலீசாருக்கும் உத்தரவிட்டது. இதன்படி தாசில்தார் அனில், சாந்தி நகருக்கு வந்தார். வீட்டில் இருந்து வெளியேறும்படி சுப்பலட்சுமியிடம் கூறினார். ஆனால் அவர் தாசில்தாருடன் வாக்குவாதம் செய்தார். 'நாங்களும் பணம் போட்டு வீடு கட்டினோம்; காலி செய்ய முடியாது' என பிடிவாதம் பிடித்தார்.தாசில்தார், போலீசார் உதவியுடன், சுப்பலட்சுமி அவரது கணவர், பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்றினார். வீட்டை வெங்கட ரோணப்பாவிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை