உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஐந்து புலிகள் சிறைபிடிப்பு

 ஐந்து புலிகள் சிறைபிடிப்பு

மைசூரு: மைசூரில் கிராமப்புறத்தில் சுற்றித்திரிந்த ஐந்து புலிகள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளன. மைசூரு துணை வன பாதுகாவலர் பரமேஷ் கூறியதாவது: மைசூரில் கிராமப்பகுதியில் சுற்றித்திரிந்த ஐந்து புலிகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவை அடர்ந்த வனப்பகுதிக்குகள் கொண்டு சென்று விடப்படும். மனிதர்களை வேட்டையாடக்கூடிய விலங்கு என சிலர், புலிகளை அழைப்பது தவறு. எந்த விலங்கும் வேண்டுமென்றே மனிதர்களை தாக்குவது இல்லை. இனப்பெருக்க காலம், வானிலை ஆகியவற்றால் வனத்திலிருந்து மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு புலிகள் வருகின்றன. மைசூரில் மொத்தம் 20 புலிகள் உள்ளன. புலிகளை கண்காணிக்க 'ட்ரோன்' கேமராக்களும், வன அதிகாரிகளும் உள்ளனர். வன விலங்குகள் ஊருக்குள் நுழைந்தால் மக்கள் செய்ய வேண்டியது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை