உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுத்தை தாக்கியதில் வனத்துறை ஊழியர் காயம்

சிறுத்தை தாக்கியதில் வனத்துறை ஊழியர் காயம்

சாம்ராஜ்நகர்: கிராமத்தினரை அச்சுறுத்திய சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியரை சிறுத்தை தாக்கியது. அவர் பலத்த காயமடைந்தார். சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், எடவனஹள்ளி கிராமத்தில், சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்தது. கிராமத்துக்குள் நுழைந்து ஒரு ஆட்டை கொன்று தின்றது. இதனால் அச்சமடைந்த கிராமத்தினர், சிறுத்தையை பிடிக்கும்படி வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்தனர். வனத்துறையினரும் சிறுத்தையை தேடி கண்டுபிடிக்கும் பணியில் இறங்கினர். நேற்று மதியம் சிறுத்தையை தேடிச் சென்றனர். அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த சிறுத்தை, வன ஊழியர் ஒருவரை தாக்கி, கடித்துவிட்டு வனத்துக்குள் ஓடி மறைந்தது. இதில் பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தில் பணியாற்றும் பங்காரு, 35, என்ற வன ஊழியரின் கழுத்து, தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். பட்டப்பகலில் சிறுத்தை தென்பட்டதால், கிராமத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ