உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நாகேந்திராவுக்கு எதிராக போட்டியிட தயார் முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு சவால்

 நாகேந்திராவுக்கு எதிராக போட்டியிட தயார் முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு சவால்

பெங்களூரு: ''அடுத்த தேர்தலில் நாகேந்திரா எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்,'' என, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ஸ்ரீராமுலு தெரிவித்தார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த நாகேந்திரா, 'ஸ்ரீராமுலு, ஜனார்த்தன ரெட்டிக்கு திராணி இருந்தால், பல்லாரி ரூரல் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்' என்று சவால் விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்து, பெங்களூரில் நேற்றுஸ்ரீராமுலு அளித்த பேட்டி: நாகேந்திரா, 2028ல் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து நான் நிற்பேன். ஊழல் பணத்தை கொண்டு பல காங்கிரஸ் உறுப்பினர்கள், லோக்சபாவில் வெற்றி பெற்றுள்ளனர். இதே பணத்தை கொண்டு தான் காகேயின் மருமகனான துக்காராம், பீதர் எம்.பி.,யும் வெற்றி பெற்றனர். இப்போது மக்கள் நீதிமன்றம் முன் வாருங்கள் என்று அழைக்கிறார். அவர், காங்கிரஸ் அரசை கலைத்து விட்டு வரட்டும். நாங்களும், இப்போது மக்கள் முன் வர தயாராக இருக்கிறோம். ஏன் இவ்வளவு அவசரம்... தேர்தல் நடக்கும்போது, நாம் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வோம். இதற்கு முன் மக்கள் நீதிமன்றம் எனக்கு எதிராக ஓட்டு போட்டதால், தோல்வியடைந்தேன். ஆனால், எதிர்காலத்தில் மக்கள் மீண்டும் என்னை துாக்கிவிடுவர். ஒரே பிரச்னைக்காக இரு முறை ராஜினாமா செய்தது இதுவே முதல் முறை. சித்தராமையா முதல்வராக இருந்தபோது, வால்மீகி மேம்பாட்டு வாரிய பணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, சித்தராமையாவே ஒப்புக் கொண்டார். சட்டசபையில் நாகேந்திரா தொடர்பான விவாதத்தில் பங்கேற்க விரும்பாத முதல்வர், அவரை பாதுகாக்க தவறிவிட்டார். நாங்களா உங்கள் பதவியை பறித்தோம்... தவறு செய்தது நீங்கள்; ராஜினாமா செய்துள்ளீர்கள். எதிர்க்கட்சியாக எங்கள் பணியை செய்தோம். 2013ல் அவர் வெற்றி பெற்ற போது, அவருடன் இருந்தது நாங்கள் தான். அவரின் கண்ணீருக்கு நாங்களோ, பா.ஜ.,வோ காரணமல்ல. காங்கிரஸ் தான் காரணம். தற்கொலை செய்து கொண்ட சந்திரசேகரின் குடும்பத்தின் கண்ணீரும், வலியும் கர்மவினையாக அனுபவிக்கிறீர்கள். சந்திரசேகரின் குடும்பத்திற்கு உதவுனீர்களா; அவர்களின் நிலையை பார்த்தீர்களா... என்னை 'அண்ணா' என்று அழைத்த, உங்களை போன்ற ஒருவருக்கு 'அண்ணனாக' இருக்க நான் தகுதியற்றவர். நாங்களும் தலித்துகள் தான். இட ஒதுக்கீடு விஷயத்தில் தலித்களுக்கு அநீதி இழைத்து உள்ளது. பழங்குடியினரை சமூகத்திடமிருந்து காங்கிரஸ் இடஒதுக்கீட்டை பறித்து உள்ளது. பா.ஜ., வழங்கிய 7 சதவீத இடஒதுக்கீட்டை, 3 சதவீதமாக காங்கிரஸ் குறைத்தது. தலித்களுக்கு காங்கிரஸ் பல அநீதிகளை செய்துள்ளது. தவறு செய்து விட்டு, அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்தபடி நாகேந்திரா சுற்றித்திரிகிறார். அரசியலமைப்பு புத்தகத்திற்கென மரியாதை, கண்ணியம் உள்ளது. அதை கையில் ஏந்தியபடி சுற்றினால், நீங்கள் செய்த தவறு மறைந்துவிடுமா; ஏற்கனவே சிறைக்கு சென்றவர், மீண்டும் சிறைக்கு செல்ல நேரலாம். அவர் நேர்மையானவரும் அல்ல; சிறுவனும் அல்ல. ஒரு பெட்டியை கொடுத்து அமைச்சரானவர். பெட்டி கொடுத்தால் செல்லுபடியாகும் காலம் மலையேறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை