மேலும் செய்திகள்
பங்காரு திருப்பதியில் பக்தர்கள் விடுதி திறப்பு
09-Sep-2025
தங்கவயல்: தங்கவயலில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு நகராட்சி சார்பில் 600 பேருக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு, காஸ் அடுப்புகளை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா வழங்கினார். தங்கவயல் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த விழாவில், எம்.எல்.ஏ., பேசுகையில், ''கர்நாடக மாநில அரசின் திட்டத்தில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் நலனுக்காக இலவச சமையல் காஸ் இணைப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 600 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முதற்கட்டமாக தங்கச் சுரங்க குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஏழைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். துப்புரவு பணியாளர்கள் குடும்பத்தினருக்கு அரசு சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். நகராட்சி ஆணையர் ஆஞ்சநேயலு, தலைவர் இந்திரா காந்தி, நிலைக் குழுத் தலைவர் முனிசாமி, கவுன்சிலர்கள் கருணாகரன், தேவி, வேணுகோபால், சுபாஷினி, ஷாலினி, ஜெயபால், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Sep-2025