தங்கவயலில் நாளை இலவச மருத்துவ முகாம்
தங்கவயல், : கோலாரில் உள்ள ஆர்.எல்.ஜாலப்பா மருத்துவமனை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம், நாளை தங்கவயல் பெமல் நகர் ஆலமரம் அம்பேத்கர் சதுக்கத்தில் நடத்தப்படுகிறது.நாளை காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை இம்முகாம் நடக்கும். நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தேவையான மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. கண் மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு கோலாரில் உள்ள ஆர்.எல்.ஜாலப்பா மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இலவச அறுவை சிகிச்சை செய்யப்படும். மருத்துவ முகாமுக்கு வருவோர் கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும்.இதற்கான ஏற்பாடுகளை அம்பேத்கர் பிரசார சமிதி சார்பில் தலைவர் சவிதா என்.பாபு, செயலர் கருணா மூர்த்தி, பொருளாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.