உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மொபைலில் தோழியுடன் பேசியதால் நண்பனை கொன்ற நண்பர்கள்

மொபைலில் தோழியுடன் பேசியதால் நண்பனை கொன்ற நண்பர்கள்

மைசூரு: மொபைல் போனில், தன் தோழியிடம் பேசிய நண்பனை, மற்ற நண்பர்களுடன் சேர்ந்து தாக்கி, இரு சக்கர வாகனத்தை ஏற்றி கொலை செய்த வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடின் கெம்பிசித்தனஹுண்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரண், 19. இவரது நண்பர்கள் வசந்த் குமார், மதுசூதன், ரவிச்சந்திரன், சந்திரா, சித்தராஜு. ரவிச்சந்திரன் பிறந்த நாளை ஒட்டி, இம்மாதம் 15ம் தேதி கிராமத்தில் உள்ள ஹெஜ்ஜிஜே பாலம் அருகில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது, வசந்த், இயற்கை உபாதை கழிக்க சென்றார். அவரது போன், கிரண் அருகில் இருந்தது. இந்நேரத்தில் வசந்த் மொபைல் போனுக்கு வந்த அழைப்பை, கிரண் எடுத்துப் பேசினார். போனில் பேசிய பெண்ணிடம், அவர் குறித்து பல கேள்விகள் கேட்டுள்ளார்.சிறிது நேரத்தில், வசந்துக்கு, ஏற்கனவே போன் செய்த பெண், மீண்டும் போன் செய்துள்ளார். அப்போது, கிரண் பேசியது குறித்து வசந்திடம் அப்பெண் கூறியுள்ளார்.இதனால் கோபமடைந்த வசந்த், “எதற்காக போனை எடுத்து பேசினாய்?” என்று கூறி, அவரை அடித்துள்ளார். இதனால் கிரண் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட முயற்சித்தார். கோபம் தணியாத வசந்த், கிரணை நிறுத்தி, கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார்.அத்துடன், தன் நண்பர்களிடம் கூறி, கிரணை அடிக்கும்படி கூறினார். அவர்களும் சேர்ந்து அடித்தனர். ஒரு கட்டத்தில் இரு சக்கர வாகனத்தை, கிரணின் பின்புறமும், வயிற்றிலும் வசந்த் ஏற்றினார். படுகாயம் அடைந்த அவரை, நண்பர்களே மருத்துவமனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டனர்.இதுகுறித்து நஞ்சன்கூடு ரூரல் போலீசாருக்கும், வாலிபரின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் விசாரித்தனர்.மூன்று நாள் தொடர்ந்து சிகிச்சை பெற்றும், பலனின்றி கிரண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மகனின் சாவிற்கு அவரது நண்பர்கள் என்பதை அறிந்த, கிரணின் தந்தை சாமி, போலீசில் புகார் செய்தார். ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ