உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆக., 1ல் மல்லேஸ்வரத்தில் கோ பால்ஸ் இசை நிகழ்ச்சி

ஆக., 1ல் மல்லேஸ்வரத்தில் கோ பால்ஸ் இசை நிகழ்ச்சி

பெங்களூரு : நாட்டு மாடுகள் இனத்தை ஆதரிக்கும் நோக்கில், 'கோ பால்ஸ்' இயக்கத்தின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'செவன் ஜி பார் எ சக்ஸஸ்புல் லைப்' என்ற தலைப்பில், புகழ்பெற்ற ஹரிகதா கலைஞர் விஷாகா ஹரி, ஆன்மிகமும், இசையும் ஒருங்கிணைந்த ஓர் அரிய நிகழ்வை நிகழ்த்துகிறார். ஆகஸ்ட் 1ம் தேதி மாலை 5:30 மணிக்கு, பெங்களூரு மல்லேஸ்வரம் சவுடய்யா மெமோரியல் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் துவக்கி வைக்கிறார். 'பால-கோகதாம்ருதம்' மற்றும் 'கோகதாம்ருதம்' எனும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இவை, நாட்டுப்பசுவின் பாரம்பரியம், கிராமிய வாழ்க்கை, பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கின்றன. இந்த இசை நிகழ்ச்சி, 'கோ பால்ஸ்' இயக்கத்தின் 'மியூசிக் 2 ஹீல்' முயற்சியின் ஒரு பகுதியாகும். விவசாயம், இயற்கை மருத்துவம் மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இந்த இயக்கம், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில், 1,000க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள், 'புக் மை ஷோ' என்ற இணையதளத்தில் கிடைக்கும். 81486 94359, 97426 21242, 99667 38644 என்ற மொபைல் எண்ணிலும், www.wegopals.comஎன்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம். இயற்கை விவசாயிகளை காக்கும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை