உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாளுக்கிய மன்னர் கனவில் தோன்றிய பாதாமி பனசங்கரி அம்மன்

சாளுக்கிய மன்னர் கனவில் தோன்றிய பாதாமி பனசங்கரி அம்மன்

ஸ்கந்த புராணத்தின்படி, பாகல்கோட் மாவட்டம், பாதாமியில் திலகரன்யா என்ற வனத்தில் முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். துர்கமசுரா என்ற அரக்கன், தினமும் முனிவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். ஒரு நாள் ஹோமம் செய்து கொண்டிருந்த முனிவர்களை, அசுரன் இம்சைபடுத்தினான். இதனால், பார்வதியை நினைத்து முனிவர்கள் ேண்டினர். அசுரன் வதம் அப்போது ஹோம குண்டத்தில் இருந்து ஆதிசக்தி ரூபத்தில் பார்வதி தோன்றினார். அசுரனை வதம் செய்து, முனிவர்களை காப்பாற்றினார். கன் னடத்தில், 'பனா' என்றால் வனம் என்றும்; 'சங்கரி' என்றால் பார்வதி சொரூபம் என்றும்; அம்மனை பனசங்கரி என்றும் மக்கள் அழைக்கின்றனர். பனசங்கரி யை சாகாம்பரி என்றும் அழைக்கின்றனர். இதற்கும் ஒரு வரலாறு உண்டு. முன்னொரு காலத்தில் சாப்பிட உணவும், குடிக்க தண்ணீரும் இல்லாமல், கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, ப னசங்கரி தேவி, தன் கண்ணீரால் பூமித்தாயின் தாகத்தை தணித்து, அவருக்கு உயிர் கொடுத்தார். இதன் மூலம் பக்தர்களின் பசியை போக்கினார். கன்னடத்தில், ' சாகா' என்றால் காய்கறிகள் என்றும்; 'அம்பா' என்றால் தாய் என்றும் கூறப்படுவதால் சாகாம்பரி என்றும் அழைக்கப்படுகிறார். கர்நாடக மக்கள் ப னசங்கரியை பாலவ்வா, பனதவ்வா, சவுடேஸ்வரி, சங்கவ்வா வனதுர்கே, வனசங்கரி, சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பதால் சிம்ம வாகனி என்றும் அழைக்கின்றனர். சாளுக்கியர் ஆட்சி கல்யாண சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில் மூன்றாவது ஜகதேகம்மல்லா மன்னரின் கனவில் பனசங்கரி அம்மன் தோன்றி, இவ்விடத்தில் தனக்கு கோவில் கட்டும்படி கூறி விட்டு மறைந்தார். அம்மன் கூறியபடி, 602ல் பனசங்கரி அம்மனுக்கு கோவில் கட்டினார். திராவிட கட்டட கலையில் கட்டப்பட்ட இக்கோவில், பின் விஜயநகர கட்டட கலையையும் பிரதிபலிக்கிறது. கோவிலின் ராஜகோபுரத்தில் பல சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. உள்ளே நுழைந்ததும் பெரிய திறந்தவெளி பகுதி இருக்கும். மூலஸ்தானத்தில் கருப்பு நிற கல்லில் சிங்கத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார். எட்டு கைகளில் திரிசூலம், மணி, உடுக்கை, வாள், கேடயம், அசுரனின் தலையுடன், காலால் அசுரனை மிதித்தபடி காட்சி அளிக்கிறார். கோவிலின் முன்புறம் சதுர வடிவில் தெப்பகுளம் உள்ளது. இதனை, 'ஹிரதாரா தீர்த்தா' என்று அழைக்கின்றனர். பிறந்த குழந்தையை வாழை இலையில் செய்யப்பட்ட தொட்டிலில் வைத்து, இந்த தெப்ப குளத்தில் வைத்தால், அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ராகுவுக்கு பிடித்த மான கடவுள் சாகாம்பரி. எனவே, ராகுகாலத்தில் பக்தர்கள் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், தோஷம் நீங்கும் என்று உறுதியாக நம்புகின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை