உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சோலார், காற்றாலைகளில் மின் உற்பத்திக்கு அரசு திட்டம்

சோலார், காற்றாலைகளில் மின் உற்பத்திக்கு அரசு திட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் சோலார், காற்றாலை மூலம் 19,000 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி செய்ய, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்த, டெண்டர் அழைக்க மின் துறை தயாராகிறது.இது குறித்து, கர்நாடக மின் ஒழுங்கு முறை ஆணைய நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் கூறியதாவது:மாநிலத்தில் சோலார், காற்றாலை மூலம் 19,000 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்க திட்டம் வகுத்துள்ளோம். இதற்கான டெண்டர் அழைக்க தயாராகிறோம். 2030ம் ஆண்டுக்குள் இலக்கை எட்டுவோம்.சோலார், காற்றாலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பேட்டரி அல்லது மின் தொகுப்பு பாதையில் சேகரித்து வைத்து, தேவைப்படும் போது பயன்படுத்துவதே, திட்டத்தின் நோக்கமாகும். மின்சாரத்தை சேமித்து வைக்கும் வசதி சரிவர இல்லாததால், மாநிலத்தில் சில நேரங்களில், தேவை அதிகம் இருக்கும் போது, மின்சாரம் வினியோகிக்க முடியவில்லை.மின் தேவை அதிகம் இல்லாத நேரங்களில், மின்சாரம் அதிகம் உற்பத்தியாகிறது. இதை சேகரித்து வைத்தால், தேவை அதிகமாகும் போது பயன்படுத்த உதவியாக இருக்கும்.இத்திட்டத்தின் கீழ் 19,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில் 15,000 மெகாவாட் மின்சாரம் பெலகாவி, கொப்பால், ராய்ச்சூர், கதக், ஹாவேரி, சித்ரதுர்கா உட்பட வட மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும்.பல்வேறு மாவட்டங்களில், திட்டத்துக்கு தேவையான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. விவசாயிகளுடன் பேச்சு நடத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில், திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை