உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொலையான சிறுமி குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதி

கொலையான சிறுமி குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதி

ஹூப்பள்ளி: பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமியின் குடும்பத்திற்கு ௧௦ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.ஹூப்பள்ளி, அசோக் நகரில் நேற்று முன்தினம் பீஹாரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரித்தேஷ் குமார், 35, என்பவர், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தார். இதை கண்டித்து அப்பகுதியினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, அசோக் நகர் போலீஸ் எஸ்.ஐ., அன்னபூர்ணா தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, அந்நபர் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்ய முயற்சிக்கும் போது, அந்நபர் கற்களால் போலீசாரை தாக்கினார். இதனால், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், அவர் இறந்தார். இச்சம்பவம் மாநில அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் கொறடா

இந்நிலையில், இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இத்தகவலை மேல்சபை காங்கிரஸ் கொறடா சலீம் அகமது தெரிவித்தார். மேலும், சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒரு வீடு கட்டி தருவதாக குடிசைப்பகுதி வாரியம் முடிவு செய்து உள்ளதாக, குடிசைப்பகுதி வாரியத் தலைவர் பிரசாத் அப்பய்யா அறிவித்தார்.இந்நிலையில், ஹூப்பள்ளி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சந்தோஷ் லாட், இறந்த சிறுமியின் பெற்றோரை நேற்று நேரில் சென்று பார்த்து, ஆறுதல் கூறினார். குற்றவாளியை என்கவுன்டர் செய்த போலீஸ் எஸ்.ஐ., அன்னபூர்ணாவிற்கு, 'சல்யூட்' அடித்து பாராட்டினார். பிணவறைக்கு சென்று, சிறுமியின் உடலை பார்த்தார். கண்களில் கண்ணீருடன் காணப்பட்டார்.

போதைப்பொருள்

இதன்பின், அவர் அளித்த பேட்டி:சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஏற்பட்ட அவமானம். அந்த சிறுமியின் முகத்தை பார்க்க கூட முடியவில்லை. குற்றவாளி போதை பொருள் பயன்படுத்தி இருந்தாரா என பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரிய வரும். இனிமேல், மாவட்டத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள பதற்றமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கி உள்ளன.இதுமட்டுமின்றி சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு, வீடு ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறுமியின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து அரசிடம் வலியுறுத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை