உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மோசமான வானிலையால் கவர்னரின் ராய்ச்சூர் பயணம் ரத்து

மோசமான வானிலையால் கவர்னரின் ராய்ச்சூர் பயணம் ரத்து

பல்லாரி : ராய்ச்சூரின் விவசாய பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கவர்னர் தாவர்சந்த் கெலாட், மாநில விவசாயத்துறை அமைச்சர் செலுவராய சாமி உள்ளிட்டோர் பெங்களூரில் இருந்து நேற்று காலை 10:30 மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக பல்லாரியின் தோரணகல்லில் உள்ள ஜிந்தால் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. எரிபொருள் நிரப்பிக் கொண்டு ஹெலிகாப்டர் புறப்பட்டது.ஆனால் மழை பெய்து வானிலை மோசமாக இருந்ததால், தொடர்ந்து ஹெலிகாப்டர் பறக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. மீண்டும் ஜிந்தால் விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டர் திரும்பியது.அதன்பின் சாலை வழியாக, ராய்ச்சூருக்கு கவர்னர் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு செல்ல தாமதமாகும் என்பதால், காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி காணொலிக்காட்சி வாயிலாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், மாநில விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி பங்கேற்றனர்.நிகழ்ச்சியை முடித்து கொண்டு, ஹெலிகாப்டரில் பெங்களூரு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி