உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குப்பை குவியலில் துப்பாக்கி, குண்டுகள்

குப்பை குவியலில் துப்பாக்கி, குண்டுகள்

கலபுரகி: குவிந்து கிடந்த குப்பைக்கு இடையே பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியும், வெடிக்காத குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கலபுரகி மாவட்டம், காலகி தாலுகாவின், சிஞ்சோளி ஹெச் கிராமத்தில் வசிப்பவர் மாளப்பா ஹூகொன்டா. இவர் இதே கிராமத்தில் தையல் கடை நடத்துகிறார். துணி தைக்கும்போது வெட்டப்படும் தேவையற்ற துணி துண்டுகளை, கடையின் பின்புறம் உள்ள காலியிடத்தில் போட்டு வைத்திருந்தார். அதிகமான கழிவு சேர்ந்ததால், நேற்று காலை தீ வைத்து விட்டு, கடைக்கு சென்றார். அங்கிருந்து திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த அவர், அங்கு சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். குப்பையை கிளறி பார்த்தார். எரிந்த இடத்தில் நாட்டுத் துப்பாக்கியும், மூன்று குண்டுகளும் இருப்பது தெரிந்தது. இது குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த காலகி போலீசார், துப்பாக்கியையும், குண்டுகளையும் கைப்பற்றினர். தையற்கடை உரிமையாளர் மாளப்பாவிடம் விசாரணை நடத்துகின்றனர். நாட்டுத் துப்பாக்கியை கழிவு துணி குவியலுக்குள் மறைத்து வைத்தது யார் என்பதை, கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை