மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / ஆக. 27
27-Aug-2025
ஹலசூரு: பெங்களூரு ஹலசூரில் சுயம்பு காளி அம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா நாளை துவங்கி, அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 7:30 மணிக்கு அபிஷேகம்; காலை 9:00 மணிக்கு மஹா மங்களாரத்தி; இரவு 8:15 மணிக்கு மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் நடக்கிறது. துவக்க நாளான நாளை அம்மனுக்கு, விநாயகர் அலங்காரம்; 22ம் தேதி அர்த்தநாரீஸ்வரர்; 23ம் தேதி தனலட்சுமி; 24ம் தேதி தேவி கெம்பம்மா; 25ம் தேதி சாகம்பரி; 26ம் தேதி சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேகம்; காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மஹா சண்டி ஹோமம் நடக்கிறது. வரும் 27ம் தேதி மதுரை மீனாட்சி; 28ம் தேதி தேவி கருமாரி அம்மன்; 29ம் தேதி சரஸ்வதி; 30 ம் தேதி திருச்செந்துார் முருகன்; 1ம் தேதி கொல்கட்டா காளி; 2ம் தேதி ராஜராஜேஸ்வரி; 3ம் தேதி லட்சுமி நரசிம்மசுவாமி; 4ம் தேதி திருப்பதி வெங்கடேஸ்வரா; 5ம் தேதி அன்ன அலங்காரமும் அம்மனுக்கு செய்யப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை தரிசனம் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு அன்ன அலங்காரம் கலைக்கப்பட்டு, மஹா அபிஷேகம் நடக்கிறது. இதனால் பக்தர்கள் சீக்கிரம் வந்து, அன்ன அலங்காரத்தை தரிசனம் செய்து கொள்ளும்படி கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. விழா ஏற்பாடுகளை பத்மநாபன் சாமி மகன்கள் பார்த்திபன், சந்தானம் குடும்பத்தினர் செய்துள்ளனர்.
27-Aug-2025