உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சைபர் மோசடியை தடுக்க உதவி எண் அறிமுகம்

சைபர் மோசடியை தடுக்க உதவி எண் அறிமுகம்

பெங்களூரு : சைபர் மோசடியை தடுக்க, உதவி எண் '1930' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்துள்ளது. சைபர் திருடர்கள் புதுபுது வழிகளில், மக்களிடம் இருந்து பணத்தை அபகரித்து வருகின்றனர்.சைபர் குற்ற வலையில் சிக்குபவர்கள், என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள், அவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது.இந்நிலையில் ஆன்லைன் மோசடியை தடுக்கும் வகையில், கர்நாடக போலீஸ் துறை சார்பில் சைபர் குற்ற உதவி எண் 1930 அதிகாரப்பூர்வமாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் சாலையில் உள்ள அவசரகால பதில் ஆதரவு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சைபர் குற்ற உதவி எண்ணை மாநில டி.ஜி.பி., அலோக் மோகன் அறிமுகப்படுத்தினார்.பின் அவர் பேசுகையில், ''இன்றைய டிஜிட்டல் சகாப்தத்தில், குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆன்லைன் மோசடியை தடுக்க, உதவி எண் 1930ஐ அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த நம்பரை தொடர்பு கொண்டு மக்கள் சரியான நேரத்தில் உதவி பெற்றுக் கொள்ளலாம்.சைபர் குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவு வழங்குவது எங்கள் பொறுப்பு,'' என்றார்.தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரியான சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை