உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திருட வேண்டாம் என அறிவுரை கூறிய மனைவியை கொன்ற கணவர் கைது

திருட வேண்டாம் என அறிவுரை கூறிய மனைவியை கொன்ற கணவர் கைது

விஜயநகரா, : காதலித்து, திருமணம் செய்து கொண்ட பின், 'திருட வேண்டாம்' என அறிவுரை கூறிய மனைவி கொன்று புதைக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர், மாமியார் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவின் நெசவாளர்கள் காலனியில் வசிப் பவர் மஞ்சுநாத் என்ற டாலி, 25. குற்றப்பின்னணி கொண்ட இவர், திருட்டு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தவர். தொடர்ந்து திருடி வந்தார். இவர் ஹொஸ்பேட்டின், சப்பரதஹள்ளி கிராமத்தின் 17 வயது சிறுமியை, தன் காதல் வலையில் விழ வைத்தார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், மகளை கண்டித்தனர். அதை பொருட்படுத்தாத சிறுமி, பெற்றோரை உதறிவிட்டு, மஞ்சுநாத்துடன் வந்துவிட்டார். நான்கு மாதங்களுக்கு முன்பு, இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தாய் உடந்தை திருமணமான பின்னரும், திருடுவதை மஞ்சுநாத் நிறுத்தவில்லை. வெளியே சென்றால், வீட்டுக்கே வரமாட்டார். இதுகுறித்து, சிறுமி கேள்வி எழுப்பியதால், அவரை தாக்கி சித்ரவதை செய்தார். இதற்கு மஞ்சுநாத்தின் தாய் லட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மஞ்சுநாத் கத்தி, இரும்புத்தடியால் சிறுமியை தாக்கினார். இதில் சிறு மி உயிரிழந்தார். உடலை கோணிப்பையில் கட்டினார். அன்றிரவு தன் நண்பர்கள் தருண், 22, அக்பர், 26, ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்து பார்ட்டி கொடுத்து, மனைவியின் உடலை அப்புறப்படுத்த உதவி கேட்டார். அதன்பின் மூவரும் சேர்ந்து, உடலை பைக்கில் கொண்டு சென்று, முனிராபாத் மேபல் அருகில் புதைத்தனர். இதற்கிடையே மூன்று நாட்களுக்கு முன் பு, மஞ்சுநாத்தின் நண்பர்களில் ஒருவர், மற்றவர்களிடம் பேசும் போது, வாய் தவறி சிறுமி கொலை விஷயத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. அழுகிய உடல் இது போலீசாரின் கவனத்துக்கு சென்றது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, மஞ்சுநாத்தின் நண்பரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரும் சிறுமி கொலையை பற்றி விவரித்தார். அதன்பின் மஞ்சுநாத், அவரது தாய் மற்றும் நண்பர்களை கைது செய்தனர். அவர்கள் நேற்று முன் தினம் சிறுமியை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். போலீசார் அங்கு தோண்டியபோது, அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதை பரிசோதனைக்கு அனுப் பினர். அந்த உடல் சிறுமியுடையதா என்பதை உறுதிப்படுத்த, டி.என்.ஏ., பரிசோதனை நடத்தவும் போலீசார் தயாராகின்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை