உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனைவியின் அந்தரங்க படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர் கைது

மனைவியின் அந்தரங்க படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர் கைது

அம்ருதஹள்ளி: விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆந்திராவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 27. பெங்களூரு அம்ருதஹள்ளியில் உள்ள மாலில் வேலை செய்கிறார். இங்கு வேலை செய்த, 25 வயது பெண்ணும், கோவிந்தராஜும் காதலித்தனர். கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆன்லைன் சூதாட்டம், குடிப்பழக்கத்தால் பணத்தை இழந்த கோவிந்தராஜ், மனைவியின் சம்பள பணத்தையும் செலவு செய்தார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கோவிந்தராஜை பிரிந்து மனைவி, ஆந்திராவில் உள்ள தனது ஊருக்கு சென்று விட்டார். விவாகரத்து கேட்டு, பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுபற்றி அறிந்த கோவிந்தராஜ், மனைவியை மொபைல் போனில் அழைத்து பேசினார். வழக்கை வாபஸ் பெற்று விடும்படி கூறினார். இதற்கு மனைவி மறுத்ததால், 'உனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன், நான் தற்கொலை செய்வேன்' என்று மிரட்டினார். இதனால், சில தினங்களுக்கு முன்பு கோவிந்தராஜ் மனைவி பெங்களூருக்கு திரும்பி வந்தார். ஆனாலும், மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை, முகநுால் பக்கத்தில் கோவிந்தராஜ் பதிவிட்டார். மனைவியின் முகநுால் நண்பர்களையும், 'டேக்' செய்தார். அப்பெண், கணவர் மீது போலீசில் புகார் செய்தார். கோவிந்தராஜை, அம்ருதஹள்ளி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ