மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவர் எஸ்கேப்
ஹாசன்: குடிபோதையில் மனைவியை எரித்து கொலை செய்ய முயற்சித்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். ஹாசன் மாவட்டம், சக்லேஸ்புரா தாலுகாவின் யசளூர் கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீமந்த், 28. இவரது மனைவி சுஷ்மிதா, 25. ஏழு மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது. குடி பழக்கத்துக்கு அடிமையான ஸ்ரீமந்த், தினமும் போதையில் வந்து மனைவியை தாக்கி இம்சித்தார். தாய் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி, தொந்தரவு கொடுத்தார். ஸ்ரீமந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பும் இருந்தது. இது குறித்து மனைவி தட்டி கேட்டதால், தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. ஜூலை 30ம் தேதி மனைவிக்கு பலவந்தமாக விஷ மாத்திரை கொடுத்த ஸ்ரீமந்த், பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினார். சுஷ்மிதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தனர். சுய நினைவு திரும்பிய பின், நடந்த சம்பவத்தை சுஷ்மிதா பெற்றோரிடம் கூறினார். அவர்கள் ஸ்ரீமந்த் மீது, யசளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். போலீசாரும் அவரை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.