உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குப்பை கொட்டிய ஐஸ்கிரீம் பார்லருக்கு ரூ.10,000 அபராதம்

குப்பை கொட்டிய ஐஸ்கிரீம் பார்லருக்கு ரூ.10,000 அபராதம்

பெங்களூரு: பொது இடத்தில் குப்பையை போட்ட, ஐஸ்கிரீம் பார்லர் உரிமையாளருக்கு ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், அபராதம் விதித்தது. பொது இடங்களில் குப்பை போட்டால், அபராதம் விதிக்கப்படும் என, ஜி.பி.ஏ., அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் பலரும் இதை பொருட்படுத்துவது இல்லை. இதனால் அவர்களின் வீட்டு முன்பாகவே, குப்பை கொட்டி பாடம் புகட்டப்படுகிறது. பெங்களூரின், ஹெச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்டில் உள்ள ஐஸ்கிரீம் பார்லர் ஊழியர்கள், பொது சாலையில் கழிவுகளை கொட்டினர். இதையறிந்த ஜி.பி.ஏ., அதிகாரிகள், அங்கு சென்று ஐஸ்கிரீம் பார்லருக்கு, 10,000 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.'இனி பொது சாலையில் குப்பையை போடக்கூடாது' என, எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை