உள்ளூர் செய்திகள்

தங்கவயலில்

தங்கவயலில் போலீஸ் தியாகிகள் தினம்

தங்கவயல்: போலீஸ் துறையின் தியாகிகள் தின நிகழ்ச்சி, நேற்று ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலைய சதுக்கத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தங்கவயல் 3-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவகுமார், போலீஸ் துறை தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத், டி.எஸ்.பி. லட்சுமய்யா, டாக்டர் பி.ராஜேந்திரகுமார், சாரணர் இயக்க அமைப்பின் மாவட்ட உதவி ஆணையர் ஆர்.பிரபுராம், வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.என்.ராஜகோபால கவுடா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி