காங்கிரஸ் சாதனை மாநாடு தேவையா? வெளுத்து வாங்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் சாதனை மாநாடு தேவையா? வெளுத்து வாங்கிய எதிர்க்கட்சி தலைவர்கள்
பெங்களூரு : பெங்களூரு மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், சாதனை மாநாடு நடத்திய காங்கிரஸ் அரசை அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.பெங்களூரில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மக்கள் பலரும் தங்கள் வீட்டிலிருந்து வெயில் வரமுடியாமல் தவித்தனர். அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். தண்ணீரில் வாகனங்களை இயக்கி, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். விடிய விடிய பெய்த மழையில், நேற்று முன்தினம் மூவர் உயிரிழந்தனர்.இது போன்ற சூழ்நிலையில், காங்கிரஸ் சாதனை மாநாட்டை நேற்று பிரமாண்டமாக நடத்தியது. இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. பொறுமை இழந்த அரசியல் தலைவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.-------------------* நாடகம் போதும்உத்தரவாத திட்டங்கள் எனும் நாடகத்தை நிறுத்த வேண்டும். உடனடியாக பெங்களூரு உட்பட பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட, பகுதிகளில் உள்ள மக்களை கவனியுங்கள். மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமித்து, உடனடியாக நிவாரண பணிகளை துவங்குங்கள். தேசிய அளவில் முன்மாதிரியான பெங்களூரு நகரத்தை, சரி செய்யுங்கள்.குமாரசாமி,மத்திய கனரக தொழில் துறை அமைச்சர்.........................* எதற்கு மாநாடு?மழையால் ஏற்பட்ட சேதத்தை சமாளிக்க முடியாத காங்கிரஸ் அரசு, என்ன சாதனை செய்து விட்டதாக கூறி சாதனை மாநாடு நடத்துகிறது. மக்கள் மழையில் தவிக்கும் நேரத்தில், முதல்வரும், துணை முதல்வரும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இதிலிருந்து அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பது தெரிகிறது.பிரஹலாத் ஜோஷி, மத்திய உணவுத் துறை அமைச்சர்......................* வெட்கம் இல்லையா?காங்கிரஸ் அரசு, பெங்களூரை மோசமானதாக மாற்றிவிட்டது. மழையால் நேற்று சிலர் இறந்த நிலையில், இவர்களால் எப்படி மாநாடு நடத்த முடிகிறது. அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா. சிவகுமார் டயலாக் பேசுவதில் மாஸ்டராக உள்ளார். வீடு தேடி வரும் என கூறிய அரசு, மழை நீரை வீடு தேடி வர வைத்து உள்ளது.அசோக்,சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்.....................* வேலை நிறுத்தம்கனமழை பெய்து வரும் நிலையில், காங்கிரஸ் அரசு மாநாடு நடத்துவதில் கண்ணும் கருத்துமாய் உள்ளது. ஒப்பந்தாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், மழைநீர் வடிகால் வேலைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. பி.எம்.டி.சி., டிப்போக்கள், குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகள் என அனைத்தும் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளது.விஜயேந்திரா,மாநில பா.ஜ., தலைவர்...................* வீட்டுக்கு நீச்சல்மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு நீச்சல் அடித்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்து உள்ளது. கடவுளே வந்தாலும் பெங்களூரை காப்பாற்ற முடியாது என சிவகுமார் கூறுகிறார். மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்து கொண்டு இப்படியெல்லாம் பேசலாமா.சலவாதி நாராயணசாமி,மேல்சபை எதிர்க்கட்சி தலைவர்.............................* உடனடி நடவடிக்கைஅனைத்து அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். உடனடி நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று முதல்வருடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நானும் செல்ல உள்ளேன். எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து கொண்டிருப்பர். நான் எனது கடமையை செய்து கொண்டிருக்கிறேன்.சிவகுமார்,துணை முதல்வர்பெங்களூரு, மே 21-பெங்களூரில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மக்கள் பலரும் தங்கள் வீட்டிலிருந்து வெயில் வரமுடியாமல் தவித்தனர். அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். இது போன்ற சூழ்நிலையில், காங்கிரஸ் சாதனை மாநாட்டை நேற்று பிரமாண்டமாக நடத்தியது. இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. பொறுமை இழந்த அரசியல் தலைவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். நாடகம் போதும்!
உத்தரவாத திட்டங்கள் எனும் நாடகத்தை நிறுத்த வேண்டும். உடனடியாக பெங்களூரு உட்பட பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட, பகுதிகளில் உள்ள மக்களை கவனியுங்கள். மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமித்து, உடனடியாக நிவாரண பணிகளை துவங்குங்கள். தேசிய அளவில் முன்மாதிரியான பெங்களூரு நகரத்தை, சரி செய்யுங்கள்.குமாரசாமி,மத்திய கனரக தொழில் துறை அமைச்சர். எதற்கு மாநாடு?
மழையால் ஏற்பட்ட சேதத்தை சமாளிக்க முடியாத காங்கிரஸ் அரசு, என்ன சாதனை செய்து விட்டதாக கூறி சாதனை மாநாடு நடத்துகிறது. மக்கள் மழையில் தவிக்கும் நேரத்தில், முதல்வரும், துணை முதல்வரும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இதிலிருந்து அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பது தெரிகிறது.பிரஹலாத் ஜோஷி, மத்திய உணவுத் துறை அமைச்சர். வெட்கம் இல்லையா?
காங்கிரஸ் அரசு, பெங்களூரை மோசமானதாக மாற்றிவிட்டது. மழையால் நேற்று சிலர் இறந்த நிலையில், இவர்களால் எப்படி மாநாடு நடத்த முடிகிறது. அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா. சிவகுமார் டயலாக் பேசுவதில் மாஸ்டராக உள்ளார். வீடு தேடி வரும் என கூறிய அரசு, மழை நீரை வீடு தேடி வர வைத்து உள்ளது.அசோக், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர். வேலைகள் நிறுத்தம்
கனமழை பெய்து வரும் நிலையில், காங்கிரஸ் அரசு மாநாடு நடத்துவதில் கண்ணும் கருத்துமாய் உள்ளது. ஒப்பந்தாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், மழைநீர் வடிகால் வேலைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.விஜயேந்திரா, மாநில பா.ஜ., தலைவர். இப்படி பேசலாமா?
மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு நீச்சல் அடித்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்து உள்ளது. கடவுளே வந்தாலும் பெங்களூரை காப்பாற்ற முடியாது என சிவகுமார் கூறுகிறார். மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்து கொண்டு இப்படியெல்லாம் பேசலாமா.சலவாதி நாராயணசாமி, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர். உடனடி நடவடிக்கை!
அனைத்து அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று முதல்வருடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நானும் செல்ல உள்ளேன். நான் எனது கடமையை செய்து கொண்டிருக்கிறேன்.சிவகுமார், துணை முதல்வர்