உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பூட்டியிருந்த வீட்டில் நகை பணம் திருட்டு

பூட்டியிருந்த வீட்டில் நகை பணம் திருட்டு

மைசூரு, : வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர். மைசூரு ஹுன்சூர் டவுன் மஞ்சுநாதா லே - அவுட்டில் வசிப்பவர் ரவிகுமார். உடல்நலக்குறைவால் மைசூரு தனியார் மருத்துவமனையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவரை கவனித்து கொள்வதற்காக மனைவியும், குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் காலை மைசூரு சென்றனர். நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். நேற்று காலையில், திருட்டு நடந்தது தெரிந்தது. ஹுன்சூர் போலீசாரின் விசாரணையில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை