உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / செஸ் விளையாட்டில் முதலிடம் பிடித்த ஜானவி

செஸ் விளையாட்டில் முதலிடம் பிடித்த ஜானவி

- நமது நிருபர் -: மாண்டியா மாவட்டம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானவி, 15. பத்தாம் வகுப்பு மாணவி. இவர், 5ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே செஸ் போட்டிகளில் பங்கேற்க துவங்கினார். மாவட்ட, மாநில அளவிலான செஸ் போட்டிகளில், 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி குவித்து உள்ளார். பதக்கம் வாங்குவது, வெற்றி பெறுவதெல்லாம் இவருக்கு சர்வ சாதாரணம். இதனால், 2025ம் ஆண்டு, பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான செஸ் போட்டியில், கர்நாடகாவின் சார்பாக பங்கேற்றார். 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், முதல் பரிசை பெற்று, மாநிலத்திற்கு பெருமை சேர்த்தார். சமீபத்தில் நடந்த, 2026ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான செஸ் போட்டியிலும் பங்கேற்று, முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார். இதன் மூலம், இந்தியாவில், 17 வயதுக்கு உட்பட்ட செஸ் வீராங்கனைகளில், 8வது இடத்தை பிடித்து உள்ளார். இதனால், அவரது பெற்றோர், பயிற்சியாளர், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து, ஜானவியின் பயிற்சியாளர் சேத்தன் கூறியதாவது: ஜானவியின் கடினமான பயிற்சி, ஒழுக்கம், செஸ் மீதான ஆர்வம் ஆகியவையே, அவர் அடையும் வெற்றிக்கான காரணங்கள். ஜானவி தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் முதலிடம் பிடித்தது மிகப்பெரிய விஷயம். இது, மாண்டியா ராயல் செஸ் அகாடமியை பெருமையடைய செய்துள்ளது. எதிர்காலத்தில் அவர் மேலும் பல பதக்கங்களை வெல்வார். நம் நாட்டிற்காக நிச்சயம் அவர் பெருமை சேர்ப்பார். திறமையான குழந்தைகளுக்கு சரியான பயிற்சியும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டால் வெற்றி உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி