உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெயர் பலகையில் கன்னடம் முதியவர் வாக்குவாதம்

பெயர் பலகையில் கன்னடம் முதியவர் வாக்குவாதம்

பெங்களூரு: 'கடையின் பெயர் பலகையில் கன்னடம் தான் இருக்க வேண்டும்' என, முதியவர் ஒருவர் வாக்குவாதம் செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பெங்களூரில் சமீப காலமாகவே மொழி ரீதியான பிரச்னைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இச்சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாவதும் வழக்கமாகிவிட்டது.அந்த வகையில், பெங்களூரு பேகூர் பகுதியில் உள்ள கைவினை பொருட்கள் கடையின் பெயர் பலகையில், ஆங்கிலத்தில் பெரிய அளவிலும், கன்னடத்தில் சிறிய அளவிலும் எழுதப்பட்டிருந்தது.இதை பார்த்த முதியவர் ஒருவர், அந்த கடையின் பெண் உரிமையாளரிடம், 'கடையின் பெயர் பலகையில் 60 சதவீதம் கன்னடம் தான் இருக்க வேண்டும்' என வாக்குவாதம் செய்தார்.இதற்கு கடையின் உரிமையாளர் கூறுகையில், 'இதை கேட்க நீங்கள் யார்? பெயர் பலகையில் சிறிய அளவில் கன்னடத்தில் எழுதி உள்ளேன். இது இந்தியா. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல தேவையில்லை' என்றார்.இந்த வாக்குவாதம், தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடையின் உரிமையாளரை கண்டித்து பலரும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை