கர்நாடக பட்ஜெட் தாக்கல் நேரம் அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம் 6 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளே நிதி துறையை தன் வசம் வைத்துள்ள, முதல்வர் சித்தராமையா 2026 - 2027 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சட்டசபை செயலர் விசாலாட்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மார்ச் 6 ம் தேதி காலை 10:15 மணிக்கு பட்ஜெட்டை, முதல்வர் தாக்கல் செய்வார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுவரை சித்தராமையா 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார். அடுத்த மாதம் 17 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைக்க உள்ளார்.