உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்நாடக செங்குந்தர் சங்க 41வது  ஆண்டு விழா 28ல் கொண்டாட்டம்

 கர்நாடக செங்குந்தர் சங்க 41வது  ஆண்டு விழா 28ல் கொண்டாட்டம்

பெங்களூரு: கர்நாடக செங்குந்தர் சங்கத்தின், 41வது ஆண்டு விழா, வரும், 28ம் தேதி பெங்களூரில் கொண்டாடப்படுகிறது. பெங்களூரு ஸ்ரீராமபுரம் ராமசந்திரபும் - 1வது மெயின் ரோட்டில் கர்நாடக செங்குந்தர் சங்க அலுவலகம் உள்ளது. இச்சங்கத்தின், 41வது ஆண்டு விழா வரும், 28ம் தேதி, பெங்களூரு ராஜாஜி நகர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள, 'பார்வதி கன்வென்ஷன் ஹாலில்' நடைபெறுகிறது. காலை, 9:30 மணிக்கு துவங்கும் ஆண்டு விழாவில், சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அறிமுகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, சங்கத்தின் தலைவர் கந்தசாமி வரவேற்று பேசுகிறார். காலை, 10:30 மணிக்கு, 2026ம் ஆண்டிற்கான சங்க காலாண்டர் வெளியிடப்படுகிறது. தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த செங்குந்தர் சமூக மாணவர்களை கவுரவித்து பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. கர்நாடக மாநில நெசவாளர் சமூகங்களின் கூட்டமைப்பு நிறுவன தலைவர் லட்சுமி நாராயணா, தலைவர் சோமசேகர், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொளுந்து உள்ளிட்டோர் கவுரவிக்கப்படுகின்றனர். பிரபல இயக்குனர் செல்வமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். மதியம், 1:00 மணிக்கு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதிய உணவு முடிந்த பின், 2:30 முதல் மாலை, 5:30 மணி வரை கல்யாண மாலை நிகழ்ச்சி நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கர்நாடக செங்குந்தர் சங்கத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை