உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  போதை மீட்பு மையத்தில்  கேரள நபர் அடித்து கொலை?

 போதை மீட்பு மையத்தில்  கேரள நபர் அடித்து கொலை?

மாதநாயக்கனஹள்ளி: போதை மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்ட நான்கு நாட்களில், கேரள நபர் திடீரென இறந்தார் . கேரளாவை சேர்ந்தவர் மனிஷ், 42. அளவுக்கு அதிகமாக மது குடித்தார். இந்த பழக்கத்தில் இருந்து அவரை மீட்டு வர, பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளியில் உள்ள மறுவாழ்வு மையத்தில், கடந்த 1ம் தேதி குடும்பத்தினர் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று மனிஷ் திடீரென இறந்தார். சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், கை, கால்களை கட்டி மனிஷை, மறுவாழ்வு மைய ஊழியர்கள் அடித்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறி உள்ளனர். மாதநா யக்கனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை