உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலூரில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை: 24 மணிநேரத்தில் பெங்களூருவில் மீட்ட போலீஸ்: 4 பேர் கைது

வேலூரில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை: 24 மணிநேரத்தில் பெங்களூருவில் மீட்ட போலீஸ்: 4 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (ஜூலை 31) கடத்தி செல்லப்பட்ட ஆண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்டதுடன், கடத்திய பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்த கோவிந்தன் - சின்னு தம்பதிக்கு கடந்த ஜூலை 27ல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழுந்தை பிறந்துள்ளது. நேற்று (ஜூலை 31) காலையில் தாய் சின்னு உணவருந்திக் கொண்டிருந்தபோது குழந்தை அழுதுள்ளது. அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர், குழந்தையை தான் கவனித்துக் கொள்வதாக கூறி வாங்கியுள்ளார்.சிறிது நேரத்தில், குழந்தையையும், அந்த பெண்ணையும் காணாததால் தாய் சின்னு அதிர்ச்சியடைந்தார். குழந்தை கடத்தப்பட்டது உறுதியான நிலையில், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, நீல நிற புடவை கட்டிய பெண் ஒருவர் சுமார் 10 வயதுள்ள சிறுவனுடன் வந்து ஒரு பையில் குழந்தையை வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.இன்று, குழந்தையை கடத்தி சென்ற வேலூர் மாவட்டம் இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர், கர்நாடகாவில் பணிப்பெண்ணாக பணிபுரிந்ததாகவும், தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளருக்கு கொடுப்பதற்காக குழந்தையை கடத்தியதாகவும் கைதான பெண் வாக்குமூலம் அளித்தார். கடத்தல் தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரையும் வேலூருக்கு தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

முரளி
ஆக 01, 2024 17:15

Vellore காவல் துறையினர் அவர்களுக்கு பல கோடி நனறிகள்


வாய்மையே வெல்லும்
ஆக 01, 2024 13:03

இதனால் நான் உலகத்து சொல்ல நினைப்பது என்னவென்றால் மாடல் அரசின் போலீசு சூப்பரோ சூப்பர்.. போடுறா வணவேடிக்கைய எடுங்கடா சுவீடு .. குழந்தை பத்திரமாக கிட்டியது பரம சந்தோசம். ரமேஷ் சரகம் சார் சொன்னமாதிரி திருட்டு மொள்ளமாரி கூட்டத்துக்கு சவுக்கடிகள் கூடிய சிறைவாசம் கொடுத்தால் தான் சற்று வழிக்கு வருவார்கள்.. பாத்ரூம் வழுக்கி விழுதல் மாவுக்கட்டும் ஓகே தான்


Ramesh Sargam
ஆக 01, 2024 12:07

இப்படிப்பட்டவர்களுக்கு தண்டனை மிக மிக கடுமையாக கொடுக்கவேண்டும். எங்கே தண்டனை அவர்களுக்கு? ஓரிரு நாட்கள் போலீஸ் விசாரணை செய்து, பிறகு நீதிமன்றத்தில் ஒரு ஆயிரமோ அல்லது ஒரு அய்யாயிரமோ அபராதம் விதித்து விட்டுவிடுவார்கள் நீதியரசர்கள். தண்டனை அப்படி இருப்பதால்தான், இப்படி கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இப்படிப்பட்ட கடத்தல்கள் பின்னாளில் நடக்காமல் இருக்க நீதிமன்றம் இப்படிப்பட்ட கடத்தல்காரர்களுக்கு மிக மிக கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை