குலதேவி கோவில் உண்டியல் வசூல் ரூ.4.50 லட்சம்
முல்பாகல்: குலதேவி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் பக்தர்களின் காணிக்கை 4.50 லட்சம் ரூபாய் இருந்தது. கோலார் மாவட்டத்தில் கோவில்களின் நகரமாக விளங்குவது முல்பாகல். இங்குள்ள பல கோவில்களை தரிசிக்க உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்க ளை சேர்ந்தவர்களும் வருவது வழக்கம். இங்கு, குலதேவி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் அரசின் ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்டது. அதிகாரிகள் முன்னிலையில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கை, 4.50 லட்சம் ரூபாய் இருந்தது.