சட்டப்போராட்டம் ஜனா., மனைவி உருக்கம்
பல்லாரி: ''ஜனார்த்தன ரெட்டியின் சட்டப்போராட்டம் தொடரும்,'' என, அவரது மனைவி லட்சுமி அருணா கூறி உள்ளார்.கனிம சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஹைதராபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் கடந்த 6ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், ரெட்டியின் மனைவி லட்சுமி அருணா, நேற்று தன் கணவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். எல்.இ.டி., திரை மூலம் தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.அவர் கூறியதாவது:என் கணவர், யாருக்கும் அநீதி இழைத்தது இல்லை. அவர் பொது வாழ்வில் அனைவருக்கும் நீதியை வழங்கி உள்ளார்.எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றங்கள் அனைத்தும் விரைவில் தவிடுபொடியாகும். சிறையில் இருந்து விரைவில் வெளியில் வருவார்.சட்ட போராட்டத்தை தொடருவோம். ஜனார்த்தன ரெட்டியின் கைதால், தொண்டர்கள் யாரும் சோர்வடைய வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.