உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வடலுார் பெருவெளியை புனித தலமாக அறிவிக்க தமிழக முதல்வருக்கு கடிதம்

வடலுார் பெருவெளியை புனித தலமாக அறிவிக்க தமிழக முதல்வருக்கு கடிதம்

பெங்களூரு: 'கடலுார் மாவட்டம் வடலுாரில் உள்ள வள்ளலார் உருவாக்கிய பெருவெளியை புனித தலமாக அறிவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவரும், தாய் மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, தான் எழுதிய கடிதம் தொடர்பாக அவர் கூறியதாவது:வடலுார் சத்திய தருமசாலை சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை உள்ளடக்கிய வள்ளலாரின் பெருவெளி பகுதியை, புனித தலமாக அறிவிக்க தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.இது குறித்து பல்வேறு வள்ளலார் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களுடன் பேசி, ஒருமனதாக கருத்து பெற்று, அதன் அடிப்படையில் தொடர்ந்து, பல்வேறு வள்ளலார் சங்கத்தினர், தமிழக அரசுக்கு கடிதங்கள் அனுப்பி, அழுத்தம் கொடுப்பர்.வடலுார் வள்ளலார் சத்திய ஞானசபையில், வரும் 25ம் தேதி 158 ஆண்டுகளாக தொடர்ந்து அணையாத அடுப்பாக இருக்கும் சத்திய தரும சாலையை உள்ளடக்கிய வள்ளலாரின் பெருவெளி பகுதியை, புனித தலமாக அறிவிக்க, தமிழக அரசிடம் குரல் கொடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ