உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கோவில் அருகே நள்ளிரவு வரை மது விற்பனை தங்கவயலில் குறை கேட்பு நிகழ்ச்சியில் புகார்

 கோவில் அருகே நள்ளிரவு வரை மது விற்பனை தங்கவயலில் குறை கேட்பு நிகழ்ச்சியில் புகார்

தங்கவயல்: 'குடியிருப்பு பகுதியில் கோவில் அருகே மதுக்கடைகளில் நள்ளிரவு 12:00 மணி வரை விற்பனை நடக்கிறது. அப்பகுதி மக்கள் தினமும் அச்சத்தில் நடமாடுகின்றனர்' என, மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் புகார் செய்யப்பட்டது. ராபர்ட்சன்பேட்டையில் உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா முன்னிலையில் தங்கவயலில் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தாசில்தார் பாரத், நகராட்சி ஆணையர் ஆஞ்சநேயலு, தலைமை மருத்துவ அதிகாரி சுரேஷ்குமார் உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். சுகன்யா - ராபர்ட்சன் பேட்டை: மூன்று ஆண்டுகளாக விதவை பென்ஷனுக்காக, தாலுகா அலுவலகத்திற்கு அலைந்தும் எந்த பயனும் இல்லை. எனக்கு எந்த வருமானமும் இல்லை. ஆனால், வருமான சான்றிதழுக்கு விண்ணப்பித்தால், எனக்கு ஆண்டு வருமானம் 15 லட்சம் ரூபாய் என வழங்கி, பி.பி.எல்., ரேஷன் கார்டு இல்லாமல் செய்துவிட்டனர். மருத்துவமனையிலும் பி.பி.எல்., கார்டுக்குரிய சலுகை கிடைக்கவில்லை. அரசு மருத்துவமனையில் மருந்து - மாத்திரைகள் வெளியில் வாங்கிக்கொள்ளுமாறு சீட்டு எழுதித் தருகின்றனர். (இவ்வாறு கூறி அவர் அழுதார்.) தாசில்தாரை பார்த்து, ரூபகலா: ரேஷன் கார்டு, விதவை பென்ஷன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணா - சானிட்டரி போர்டு காலனி: கால்வாய் சுத்தம் செய்வதில்லை. ஆழ்துளைக்கிணறை சரி செய்ய வேண்டும். குடியிருப்புப் பகுதியில் கோவில் உள்ளது. இதன் அருகில் மதுக்கடை உள்ளது. இரவு 12:00 மணி வரை மது விற்பனை நடக்கிறது. பாட்டில்களை, கோவில் அருகே வீசி விடுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி ஆணையர்: மது விற்பனை குறித்து போலீசில் புகார் செய்யப்படும். ராபர்ட்சன்பேட்டை 8வது கிராஸ் பெண்கள் குழு: 30வது வார்டுக்கு உட்பட்ட எங்கள் பகுதியில் சாலை அமைப்பதாக ஜல்லி போடப்பட்டது. கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் கால்வாய் மூடப்படவில்லை. சாலையும் அமைக்கவில்லை. கால்வாயில் வெளியேறும் சாக்கடை நீர், வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மழைக்காலத்தில் பெரும் அவதியாக உள்ளது. பல முறை புகார் செய்தும் எந்த பயனும் இல்லை. கோவிந்தராஜ் - கார்னேஷன் டவுன்: நகராட்சிக்கு வீட்டு வரி முழுதும் செலுத்தியும் பட்டா வழங்காமல் அலைக்கழிக்கின்றனர். லோக் ஆயுக்தாவிடம் பட்டா புத்தகம் இருப்பதாக கூறி வந்தனர். ஆனால், பட்டா புத்தகம், நகராட்சிக்கு வந்துவிட்டது. ஆனாலும் வழங்கவில்லை. ரூபகலா: குறைகேட்பு நிகழ்ச்சியில் பதிவு செய்து, மனு கொடுத்த அனைவர் கோரிக்கைகள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்னை உள்ள பகுதிகளில் நேரில் வந்து பார்வையிட்டு தீர்வு காணப்படும். தேவைப்படும் இடங்களில் குடிநீருக்கு ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்படும். சாலை வசதிக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின் விளக்குகள் அனைத்து இடங்களிலும் ஏற்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ