மத்துார் கலவரம் உதவி எஸ்.பி., இடமாற்றம்
மாண்டியா: மாண்டியாவின் மத்துாரில் நடந்த கலவரம் தொடர்பா க, உதவி எஸ்.பி., திம்மையா இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளார். பணியில் அலட்சியமாக செயல்பட்ட சர்க்கிள் இன் ஸ்பெக்டர் சிவகுமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். மாண்டியாவின் மத்துார் ராம் ரஹிம் சாலையில், கடந்த 7ம் தேதி இரவு நடந்த விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல்வீசப்பட்டது. இதை கண்டித்து போராட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினர் 500 பேர் மீது வழக்குப்பதிவானது. கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஒரு சமூகத்தின் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேரை போலீசார், நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்துள்ளனர். மத்துார் கலவர வழக்கு தொடர்பாக உதவி எஸ்.பி., தி ம்மையா நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோன்று விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பணியில் இல்லாமல் அலட்சியமாக செயல்பட்டதாக மத்துார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சிவகுமார் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.