உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள்; ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்

தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள்; ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்

பெங்களூரு : 'பெங்களூரு கன்டோன்மென்ட் - பையப்பனஹள்ளி இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் நடப்பதால், பல ரயில்கள் புறப்படும் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: ரயில் எண் 07339: எஸ்.எஸ்.எம்., ஹூப்பள்ளி - கே.எஸ்.ஆர்., பெங்களூரு விரைவு ரயில், இன்றும், ஏப்., 6ம் தேதிகளில், கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்கு பதில், யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். எண் 07340: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி விரைவு ரயில் ஏப்., 3, 7 ம் தேதிகளில், கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். எண் 16521: பங்காருபேட்டை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மெமு ரயில், ஏப்., 3, 7 ம் தேதிகளில், கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கு ரயில் நிலையத்துக்கு பதிலாக, பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். எண் 56520: ஹொஸ்பேட் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு பயணியர் ரயில், ஏப்., 3, 7 ம் தேதிகளில் கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்துக்கு பதிலாக, யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். எண் 17391: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி விரைவு ரயில், ஏப்., 4, 8 ம் தேதிகளில், கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

வழித்தடம் மாற்றம்

 ரயில் எண் 11013: லோக்மானிய திலக் டெர்மினல் - கோவை விரைவு ரயில், இன்றும், ஏப்., 6ம் தேதியும், கவுரிபிதனுார், எலஹங்கா, லொட்டேகொள்ளஹள்ளி, யஷ்வந்த்பூர், ஹெப்பால், பானஸ்வாடி, கார்மேலரம், ஓசூர் வழியாக செல்லும். பெங்களூரு கன்டோன்மென்ட், கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையங்களில் நிற்காது. எண் 12658: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் ரயில், ஏப்., 3, 7 ம் தேதிகளில், கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், ஹெப்பால், பானஸ்வாடி, விஸ்வேஸ்வரய்யா முனையம், கே.ஆர்.,புரம் வழியாக செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது. எண் 16593: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - மஹாராஷ்டிராவின் நந்தன் விரைவு ரயில், ஏப்., 3, 7 ம் தேதிகளில் கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், எலஹங்கா வழியாக செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது. எண் 06270: விஸ்வேஸ்வரய்யா முனையம் - மைசூரு பயணியர் ரயில், ஏப்., 3, 7 ம் தேதிகளில் விஸ்வேஸ்வரய்யா முனையம், பானஸ்வாடி, யஷ்வந்த்பூர், கே.எஸ்.ஆர்., பெங்களூரு வழியாக செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது. எண் 16022: மைசூரு - சென்னை சென்ட்ரல் ரயில், ஏப்., 3, 7 ம் தேதிகளில் கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், லொட்டேகொள்ளஹள்ளி, பானஸ்வாடி, பையப்பனஹள்ளி, கே.ஆர்.,புரம் வழியாக செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது. எண் 06269: மைசூரு - விஸ்வேஸ்வரய்யா முனையம் பயணியர் ரயில், ஏப்., 3, 7 ம் தேதிகளில் கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், பானஸ்வாடி, விஸ்வேஸ்வரய்யா முனையம் வழியாக செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை