உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சொத்து வரி கட்டாத மால்கள் மாநகராட்சிக்கு ரூ.69 கோடி இழப்பு

சொத்து வரி கட்டாத மால்கள் மாநகராட்சிக்கு ரூ.69 கோடி இழப்பு

பெங்களூரு: மால்கள் சொத்து வரி கட்டாததால், பெங்களூரு மாநகராட்சிக்கு 69 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளது.பெங்களூரு மாநகராட்சிக்கு, அதிக வருவாய் ஈட்டி தருவதில் சொத்து வரியின் பங்கு முக்கியமானது. ஆனால், சொத்து வரியை முறையாக வசூலிக்க முடியாததால், மாநகராட்சி தாக்கல் செய்யும் பட்ஜெட்டுகளுக்கு, மாநில அரசையே நம்பி உள்ளது.எப்படியோ, 2024 -- - 25 நிதியாண்டில், முதல் முறையாக 4,927 கோடி ரூபாய் சொத்து வரியை மாநகராட்சி வசூல் செய்தது.இருப்பினும், பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விஜயநகர் ஜி.டி., மால், பொம்மனஹள்ளி மீனாட்சி மால், மஹாதேவபுரா சென்ட்ரல் மால், ஜெய நகர் கருடா மால், காந்தி நகர் மந்திரி மால் ஆகியவை இன்னும் சொத்து வரியை செலுத்தாமல் உள்ளன.இது குறித்து, அந்த மால்களுக்கு பல முறை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த மால்கள் சொத்து வரியை கட்டாமல் உள்ளன. இதனால், மாநகராட்சிக்கு 69 கோடி ரூபாய் நிதி இழப்பீடு ஏற்பட்டு உள்ளது.இந்த மால்களுக்கு ஒரு நாளில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் மூலம் ஒரு நாளுக்கு பல லட்சங்களில் வருமானம் ஈட்டுகின்றன. சொத்து வரியை செலுத்த மட்டும் மனம் வரவில்லை.இந்த வரி கட்டாத மால்களுக்கு மாநகராட்சியின் விதிகளின் படி, விரைவில் சீல் வைக்கப்படும்.இதை தடுப்பதற்காக சம்மந்தப்பட்ட மால்கள், கர்நாடகா உயர் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து உள்ளன. இப்படி மொத்தம் 117 வழக்குகள் விசாரணையில் உள்ளன.இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் வரியை வசூலிக்க அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை