உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதியவரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியவர் கைது

முதியவரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியவர் கைது

கோரமங்களா : பெங்களூரு, கோரமங்களாவில் ஹோட்டல் நடத்துபவர் அஜய், 35. இவரது ஹோட்டலுக்கு 68 வயது முதியவர் ஒருவர் அடிக்கடி வருவார். அவர், அரசு பணி செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். அஜய்க்கும், அந்த முதியவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.முதியவரின் மொபைல் நம்பர், அஜயிடம் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, முதியவரிடம் மொபைல் போனில் பேசிய அஜய், நீங்கள் 25 வயது பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும், வீடியோ என்னிடம் உள்ளது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க, 2 கோடி ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டி உள்ளார்.பயந்து போன முதியவர், ஹோட்டலுக்கு சென்று வீடியோவை காட்டும்படி கேட்டார். வீடியோவில் இருந்தது முதியவர் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை என்று முதியவர் கூறினாலும், அஜய் அவரை விடவில்லை. பணம் கேட்டு மிரட்டி உள்ளார். முதியவர் அஜய் மீது கோரமங்களா போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜயை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ